உறுதிக்கு வயதில்லை
விடியும் காலையில் நடு முதுகில் வலி, இரவில் ஆரம்பித்த இருமல் காரணமா? அறியேன்.
ஆனால்...
வலி.
வலி.
சோர்ந்து போக நானென்ன உடலா?
மனமா?
இரண்டையும் தாண்டிய மூன்றாம் நிலை நான்.
வலிகளின் மீது சவாரி செய்து வானம் தாண்டியவள்.
மாலையின் வலி காலையில் போகும், காலையின் வலி மாலைக்குள் காணாமற் போகும்.
வலியைப்பற்றிப்புலம்பாதிருத்தலே வலி மருந்து!
நினைக்காதிருத்தலே நித்திய ஔஷதம்.
புலம்பாதிருத்தலே புதிய சிகிச்சை.
என் உறுதிக்கு வயதாகாது.
வலிகள் உயிரிருத்தலின் அறிகுறி.
வலி நல்லது!
வலி நல்லது!
என் உயிரை உணர்த்தும் வலிகளிலிருந்து புறப்படும் உறுதிப்புரவி என் வாழ்வுப்பயணம்.
பயணங்கள் முடிவதில்லை!
காலையும், மாலையும்.
எழுக!
நின்று விடல் மரணம்.
நில்லாது செல்வதே இயக்கம்.
நில்லாது செல்வதே இயக்கம்.
உறுதியோடு பயணம் தொடர்வோம்.
காலைகள் நமதாகும்!
காலைகள் நமதாகும்!
காலை வணக்கம்!
A Gladys Stephen determination!


Comments
Post a Comment