வைத்த இடத்தின் தரு.
நான் ஜீவ தரு.
வைத்த இடத்தில் வளரும் தரு.
முறுமுறுப்புகளற்ற உயிர் நான்.
சுவாசம் தேடி அலைபவளில்லை. அலைந்ததில்லை.
வைத்த இடத்தில் வளர்ந்த தரு.
வைத்தவர்கள் வான் சென்றதாய் பூமி சொன்னாலும் நின்ற இடத்தில் நிமிர்ந்த தரு நான்.
கூனிக்குருகி வளரவேண்டிய அவசியமில்லை.
வைத்தயிடத்தில் வளரும் தரு நான்.
என் இருப்பின் அமைப்பேற்று அமைதிகாக்கின்றேன்.
வான் வழங்கும் ஒவ்வொரு துளியிலும் நான் துளிர்ப்பேன்.
ஒவ்வொரு காலையும் என் வாய்ப்பு .
இன்னமும் வளர்வேன்.
நிழல் நான்.
நிஜமும், நிதமும் நானே!
வைத்த இடத்தின் தரு நான்!
காலைகள் வளர்த்த காரிகை நான்.
நம்புகின்றேன் நான்.
வைத்த இடத்தில் வளரும் தரு நான் !
காலையாம் காட்சியெல்லாம் தருக்களுக்கு ஆனந்தமே !
A Gladys Stephen ஆனந்த காலை யாழ்!
Comments
Post a Comment