விட்டுப்போகாதே

காலையும் மாலையும் கருத்தாய் காப்பவனே.
விட்டுப்போகாதே.
உபத்திரவமே நானுனக்கு,
தொந்தரவே நானுனக்கு,
துயரமேநானுனக்கு,
விட்டுப்போகாதே.
கோபங்கள் கொட்டி உன்னை சுட்டுத்தின்றபிறகும்விட்டுப்போகாதே.
பிறவிகள் வேறில்லையே, ஆகவே இப்பிறவியிலேயே இருந்துவிடு, இப்பிறவியோடு இருந்து விடு.
நானுனக்கு அரக்கமே, ஆங்காரமே, பேரோலமே, பெருங்கத்தலே...
ஆனாலும், விட்டுப்போகாதே.
அன்பால் கட்டிக்கொள்.
என் வம்பையும் மெச்சிக்கொள்.
வாட்டும் மாலைகளில் என் பாட்டையும் சகித்துக்கொள்.
நானோர் ஆபூர்வராகமென்றால் நீயோர் ஆனந்த ராகமாயிருந்து விடேன்.
(என்ன கொஞ்சம் அழவைப்பேன்...
கடைசியில் அழுவேன்...
அன்பால்...அன்பாலேயே !)
A Gladys Stephen love song!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.