மௌனப்போர்வை


இருள் ஓசைகளற்றது.
அது போர்வையாட்டம் மானுடத்தை மூடுகின்றது.
கதகதக்கவா? காப்பாற்றவா?கண்மூடவா?கண்ணாமூச்சி ஆடவா தெரியாது.
இருள் சில வெளிச்சங்களுக்கான கர்ப்பகஹகிரகம்.
பாற்கடல் இருளின் மையமே ஆதி அமிழ்தம்.
நெஞ்சம் கடைவார் நேசமெலாம் மௌனப்போர்வை துறந்து வீசும் கிரணக்கீற்றுகளே.
மௌனமும் வலிகளும் பிரிக்கவியலாதவை எனிற், அதை துறந்தவிழும் ஓசையாம் இசையெல்லாம் இனிமையே இளமையே.
போர்வை விலக்கி பார்வை துலக்கு!
விடியலின் சேதிகள் வியப்பானவை.
வாழ்க்கை அழகானது.
வாழ்வோம் வாருங்கள்!
A Gladys Stephen morning call !

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.