பவானி.

பெயரிலேயே ஓர் இதம்.
காவிரி நெகிழவிட்டு ஈரோட்டுக்கம்பளமாய்,
கரும்புக்காட்டு இனிப்புக்காற்றாய், 
முகம் மொய்க்கும் சாரலில் நான்.
என் மாலைகளில் என்னைச்சூடும் பவானியாய்,
நெஞ்சம் நிறையும் வாசமாய்
கூடவரும் நினைவுகளைச்சுமந்து செல்லும் கூடை நான்!
கூடக்கொஞ்சம் கூட்டிக்கொண்டு செல்லும் பவானியின் போக்கில் என் மனசும் போகுதே.
உள்ளுக்குள் ஊஞ்சலாடும் குட்டைக்கால் கனவுகளின் சீசா ஆட்டங்களாய் மனவலைகள்.
விழிக்கருகாமையில் நடந்த விபத்துகள், விபரீதப்பேச்சுக்கள், எல்லாம் தாண்டி என் பயணம் ஒரு நதிநடையாய்.
உடலும், மனமுமாய் நீந்தும்
பவானி மகள் நான்.
காலையும், மாலையும் உன் மடிமீது தவழும் சிறுபிள்ளை நான்.
அழுக்கானாலும் நீ அன்னையே, பவானி!
காவிரிக்கரம் நெகிழவிடும் உன் நேசத்தின் போர்வைக்குள் கதகதப்பை உணர்கின்றேன்.
பவானி.
சொல்லும் போதே சும்மா சலசலக்குதில்ல😂!
Gladys Stephen Bhavani Tribute!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.