எதுவுமில்லையோ...























சில வேளைகளில் எல்லாமே காலியானது போன்ற உணர்வு.
அறிவு, அன்பு அனைத்தும்.
நிறைய போய்விட்டதோ என்ற சந்தேகம்.
வெறுமையான ஓர் சூன்யத்தில் நிற்பது போன்ற ஒரு தோற்றம்.
மாயம்.
நிஜத்தில் எல்லாமிருந்தும் ஒன்றுமில்லாதது போன்ற ஓர் உணர்ச்சி.
குட்டி நாயாட்டம் மனசு மழையில் நனைகின்றது.
நானே மழையாய், நாய்க்குட்டியாய் மார்போடணைக்கும் தாயாய்.
வெறுமைக்குள்ளும் காட்டாற்று மழை.
அறிவிப்பற்ற சூறாவளிகள், ஆழம் பார்க்கும் சுனாமிகள்.
இந்த வெறுமை தவமும் ஒருவிதத்தில் நல்லதுதான். இல்லையேல் பீரிட்டெழும்பும் எரிமலைக்குழம்பாய் உருகியோடி எரிந்திருப்பேன்.
எரித்திருப்பேன்.
மாலை நேர மயக்கமாய் ஞாபகங்களை
கைப்பைக்குள் திணித்துக்கொள்கின்றேன்.
மேஜை மீது வைத்துவிட்டு ஒரு கோப்பை குழம்பியோடு குதூகலித்து விட்டு திரும்பி வந்தால்...
கைப்பை ஞாபகங்கள் காணமற் போயிருக்கும்.
இருக்கட்டும், நாளைகளில் திரும்பவும்
தோளில் சுமந்து கொள்ளலாம்.
வெறுமையென்பது முற்றிலும் காலியான உணர்வன்று.
நிரம்பி வழிபவைகளின் மௌனம்.
மௌனங்கள் பேசுவதில்லை என்று எந்த மஹானும் போதிக்கவியலாது.
வெறுமையென்பது வெறுங்கையன்று.
வேங்கைத்தூக்கம்.
கானக கர்ஜனை.
சில வேளைகளில் அவை கேட்க்கப்படுவதில்லை.
அவ்வளவே!
Gladys Stephen lioness roar.

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.