கருத்தாய்

ஒவ்வொரு காலையும் காத்திடுவாய்.
கருத்தாய்.
நினைவுகள் மெல்ல எழும்பி, நிதமும் உன்னை நினைத்திடுவாய்.
தொடர்ச்சிகளின் நினைவே நாம்.
நீள் நினைவுகளின் உருவாக்கமே நாம்.
கடமைகள், கழன்றவை, கனன்றவை என வாழ்நாள் நினைவுகளின் வடிவாக்கமே நாமென்ற நடமாட்டம்.
சுமந்து செல்லும் உணர்வுகளின் வெளியாக்கமே நம் ஆளுமை.
முகம் பார்த்து புகழும் மாந்தர் நடுவில் உளம் என்றே ஆகி விடு உளமே !
கருத்தாய் காலம் காட்டு.
புகழாரப்பாசுரம் பாடி இகழாரம் நினைக்கும் மாந்தர் நடுவில் நினைவார நேர்மையாய் கருத்தாய் உலவிடு.
கருத்தாய் வலம் வரும் உன் காலைகளின் விண்ணப்பரெல்லாம், கண்ணார கண்ணாயிரங்களென கற்றறிந்தவள் நீயென கற்றறியாதார் கண்கள் பூத்துப்போய் புறையேறும் .
கருத்தாய் காலையாகு.
மெல்லப்படரும் சூரியச்சினம் நீயென அறியாதோர் வார்த்தைகளெலாம் காலைப்பனிப்போலே.
அதன் ஈரப்பாதைகளே நம் வாழ்வெனும் சாலை.
வானமென்பது உள்ளேயும்தான்.
விடியலென்பதும் உள்ளேயேதான்.
கருத்தாய் காத்திடும் காலைகளில் நீ இருந்தாயென்பதே நீ எழுதும் வரலாறு.
Decide your morning!
Decide your destiny!
Happy Saturday morning!
Gladys Stephen Saturday Psalm!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.