குதிகால் விருதுகள்

பேருந்தைக்கடக்கும் காட்சிகளில் வேலை முடித்து வீட்டுக்குத் திரும்பும் மாந்தர்தம் குதிகால் வெடிப்புகள் கண்ணுக்குள் தைக்கும்.
அழகோவிய பின்னங்கால் பித்த வெடிப்பெனும் பிளவுகள் நெஞ்சம் பிளக்கும்.
மாதத்திற்கு மூன்று செருப்புகள், பயனற்று குவிந்து கிடக்கும் ஆடம்பர குதிகால் குதிரைகள்...
குதிரைகளைச்சுமக்கும் குதிரைகள்.
வீணாய்...
பயனற்று.
ஆனால்...
மானுட பாதங்களில் வெடிப்புகள்,
ஒரு ரப்பர் செருப்பணியவியலா தமிழ்பானக்கடை பக்தகூலியருக்கு செருப்பெலாம் இரண்டாம் பட்சமே.
அவரும் கவலை கொள்ளார், மனைவியரையும் கவலை கொள்ளார்.
கொஞ்ச, கொஞ்சமாய் இன்ஃபெக்ஷன், உயிருறுஞ்சும் இன்ஃபெக்ஷன்.
நின் பாத விருதுகள் நின் உழைப்பின் தடங்கள் தோழா!
மாலையில் மயக்கங்களுடன் மனையடைபவனே...
பாதம் பாதுகாத்துக்கொள்.
உன் பாதம் போகும் பாதை பார்ப்பவளின் சீவன் உன் பாதமே.
பாதம் பேண்.
மாலை நேரக்குளியலில் பாதம் நோக்கு.
மூளைக்கொத்த முக்கியம் நின் பாதங்கள்.
உழைப்பவனே ஆரோக்கியம் பேண்.
மாலைகளின் சுத்தமே காலைகளின் சுகம்.
கால்பேணு !
உன் விருதுக்கால்களுக்கும் மருந்துகள் வேண்டும்.
ஓய்வு கொடு.
உன் கனவுகளின் சிறகுகள் எல்லாம் வேரூன்றும் உன் பாதங்கள் பேண் !
ஏனெனில், ஒரு தேசத்தின் விருதுகளையெல்லாம் வாங்கித்தருவது உன் கால்களே.
மாலை வணக்கம் தோழா!
பாதம் பேண பாதம் பணிகின்றேன்.
Gladys Stephen footage!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.