கடிகார நேசம்.
சலிப்புக்கு ஆயிரம் காரணமிருப்பினும், சளைக்காமல் கடிகார நேசம்.
ஓட்டமும் , நடையுமாவோ, ஆற, அமரவோ, எதுவாயினும் கடிகாரம் சார்ந்தே காரிய சித்தி.
நேரம் மேய்த்தல் ஒரு பெருந்தவம்!
அதை மேலாண்மை என்று மெருகூட்டினாலும், காலத்தோடு ஓட்டம் பெருந்தவமே.
அதை மேலாண்மை என்று மெருகூட்டினாலும், காலத்தோடு ஓட்டம் பெருந்தவமே.
காலையில் துவக்கி, காலை காலையாய் தொடரும் இந்த காலப்பெருந்தவத்தில் காலமாகவே காலகாலமெலாம் கடிகார நேசம்.
வாழ்வெனும் கணக்கில் காலமும், கடிகாரமும் இணைபிரியாதவை.
"டைமாச்சு எழுந்திரி " , என்பதே அதிகம் பாடப்படும் தவஸுப்ரபாதம்.
"எழுந்திருங்க நட்புகளே வேலைக்கு நேரமாச்சு!".
கடிகார நேசத்துடன் ...
காலை வணக்கம்!
காலை வணக்கம்!
A Gladys Stephen Good Morning tick...tick...tick...!
😂

Comments
Post a Comment