விடியலாம் தொழிற்பேட்டை
சனிக்கிழமை இரவென்பது கனவுகளின் மூலப்பொருளென்றால்.
ஞாயிறு, கச்சாக்களின் உற்பத்திக்கூடம்.
அதைச்செய்வேன் - இதைச்செய்வேன் என்பதைச்செதுக்கும் நாள்.
ஒவ்வொரு வாரத்தின் ஓய்வும் இன்னொரு வாரத்திற்கான தயார் படுத்துதல்.
சனிக்கிழமை தயாராகி, ஒட்டடை அடித்து நீராடு. ஞாயிறு ஓய்ந்திரு உன்னாம் இறைவனுக்கு மௌனங்களால் ஆராதனை செய்.
காணிக்கைகளற்ற அபிஷேகங்களால் ஆத்மார்த்த நமாஸ் செய்!
உடலுளம் காத்திடு.
ஓய்வென்பது சோம்பலன்று.
இன்னொரு சுறுசுறுப்பிற்கான போர்ட் மீட்டிங்.
உன்னும், உன் உன்னின் உன்னனும் நடத்தும் குரூப் டிஸ்கஷன்.
நன்மைகள் பெருக்கி தீமைகள் விலக்கும் பாலிஸி மேக்கிங் செஷன்.
அடைகாத்த இரவுகளாம் ஆயத்த தவம் கலைத்து விடியலாம் தொழிற்பேட்டைக்கு
உற்பத்திப்பெருக்க வா !
ஓய்ந்திருந்து வேலை செய்.
வானை வளைத்து கூரையாக்கு!
நாளையாம் மன்டே உனது நாள்.
ஓய்தலென்பது அஸ்தமனமன்று இன்றொரு பூபாளத்திற்கான வைகறை !
விடியலின் ராகமிசைக்க தந்திகளை முறுக்கேற்று.
வெற்றி கீதமிசைக்க ஓய்வு நாள் வாழ்த்துகள்!
Happy Sunday!
A Gladys Stephen Sunday Special!
Comments
Post a Comment