மாலையில் யாரோ மனதோடு பேச...?

மனசு.
நியூரான்களின் உட்திரை.
தனக்குள் தானே பார்க்கும் தொடுதிரை.
நினைவு விரல்கள் வருடும் ஆன்ட்ராய்ட் அகம்.
மனதோடு பேசும் நினைவுகளை மீண்டும் மனசுக்குள் போட்டு பூட்டி வைத்தால் அது விருப்பம்.
சிறைவிடுவிக்க விரும்பி , அதை வெறுப்பென நினைத்தாலும் மனசே.
எல்லாம் உள்ளேயே. உள்ளுக்குள்ளேயே.
ஜீரணிக்காதவைகளின் வெளியாக்கமாகவே முரண்பாடுகளும் மனச்சிதைவுகளும்.
மாலையில் மனதோடு பேசிப்பழகுங்கள்.
யாரின் குரலுக்காகவும் காத்திருப்பதை விட உட்குரலோடு பேசுங்கள்.
காதலாய் காத்திருக்கும் அக்கணங்களைக் காதலியுங்கள்.
மனதோடு பேசும் மாலையே காலையின் தூதுவன்.
யாரோடும் பேசா மனதிருக்கலாம், மனதோடு பேசா யாருமுண்டோ ?
A Gladys Stephen evening note on the so called mind!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.