கேரளத்தின் காட்சிகளாட்டம்.



முகத்திலறை காற்று தாண்டி முகம் காட்டும் கேரளம்.
பச்சை சதுரங்கள் தாண்டி போகையில் ஒரு குதூகலம்.
மாவலி மகராச நினைப்பு.
மனசுக்குள் திருவோணப் பெண்களின் சலசலக்கும் சந்தனம் .
" படைத்தவனுக்கு எவ்வளவு ஓர வஞ்சனை. ஒருபக்கம் வறுமை. மறுபக்கம் செழுமை?"
இதை தோழமைக்கு வாட்ஸப்பினேன் பதிலுக்கு  வந்தது.
நான் அனுப்பினேன், அங்கிருந்து  வந்தது. விட்டுவிட்டேன்.
>>>கடவுளின் சொந்த பூமி<<< என்று கேரளம் கொண்டாடப்படுவதில் எனக்கு மறுப்பில்லை.
ஆனால், சோமாலியா யாருடைய பூமி என்று அதன் நிர்வாணக்குழந்தைகளுக்கு கண்டிப்பாகச் சொல்லுங்கள்.
அழகியல் காட்சிகளின் மயக்கத்தில் அவலங்களின் ஓலங்கள் மறைக்கப்படுவதைக்காட்டிலும் மோசமான மானுடம் வேறேதுமாகவும் இராது !
A Gladys Stephen Somalia contemplation!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.