மாலை மயக்கம்

உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு.
வேலையின் கழைப்பு வேந்தருக்கும் உண்டு.
கிளாடிக்கும் உண்டு கந்தசாமிக்கும் குப்புசாமிக்கும் உண்டு.
ஆனாலும்...
ஒரு சன்னலோரக்காற்றின் வருடல், ஒரு குட்டித்தூக்கத்தின் தழுவல் உன்மத்தமானது.
தாயாய் தழுவும் தூக்கமே மானுடம் தாலாட்டு.
தாஸ்மாக்கை நம்பி ஒரு கூட்டம் தூங்கா நகரிகள் !
எது உற்சாகபானமோ இல்லையோ தெரியாது. ஆனால், உறக்கம் அமிழ்தெனத்தெரியும்.
வீடடைந்து தலையணைத்தழுவி கண்ணயர்ந்தால்...
கனவுகளற்று ஒரு சயனம்.
கனவுத்தூக்கம்.
மனம்கசந்தவனுக்கு மது பானமாம்...
பழைய வேத மருந்து.
கொஞ்சம் உறக்கமும் கொடுங்கள்.
ஒவ்வொரு உறக்கத்தின் பின்னும் ஒரு புன்னகை பூக்கின்றது.
ஒவ்வொரு களைப்பின் பின்னாலும் கண்கள் கெஞ்சும் தூக்கம் உள்ளது.
தூங்கியெழ வாழ்த்துகள்!
மாலை நேர வாழ்த்துகள்!
இனிதே இந்நாள் முடியட்டும்!
A Gladys Stephen lullaby 藍

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.