குட்டித் தூக்கம், குதூகலம்
சில பகல்களுக்கு சவுண்ட் சிலீப் நல்லது. மனதின் ஓசைகளை மியூட் ஆக்கும் குட்டித்தூக்கத்தில் எப்படி ஆழ்ந்துறக்கம் என்று வரிந்து கட்டும் நக்கீர நட்பே...
குட்டித் தூக்கம் குதூகலம்.
அதுவும் ஞாயிறின் தூக்கம் ஓய்வின் உச்சம்.
சூரிய நாளின் சுடுவெம்மையில் மதியத்தூக்கம் மாலையில் வசந்தம்.
அச்சச்சோ என்னாவது இரவுத்தூக்கமென்றால், அதையும் ஆண்டு விட்டால் போச்சென்பேன்.
ஓய்வு நாளில் இமைகளும் கொஞ்சம் ஓயட்டுமே.
இதமான மாலையில் நலமான நாளையைத்துவக்கலாம்.
ஒரு நல்ல திங்களின் உற்சாக உற்சவத்திற்கு நம் ஞாயிறுகளில் பகல் தூக்கம் பல்லக்கே.
அடுத்த வார ஞாயிறில் அதை முயல இந்த மாலையில் காஃபியுடன் வாழ்த்துக்கள் !
A Gladys Stephen குதூகல மாலை வணக்கம்!
Comments
Post a Comment