காலையாம் ஆறுதல்
காலையென்பது ஆறுதலே .
காயங்களின் கட்டு.
நேற்றின் மரணங்களிலிருந்தே இன்றின் பிறப்பு.
அகழ்வாராய நம் மனமொன்றும் சிந்து சமவெளியன்று.
வலிகளின் மீதே நம் ஷாஜஹால்கள்!
ஆயினும், ஆக்ராக்களின் சாட்சியங்கள் மௌனங்களிலேயே ஓடிகொண்டிருக்கும்.
கவிஞர்களற்றவர்களின் கவிதைகளாகவே நம் தன்நிலை விளக்கங்கள்.
யாரும் ரசிக்காத அபிநயங்களாகவே நம் வார்த்தைகள்.
அன்பாரம் சூடி அதிசயத்த விழிகளெல்லாம் நக்கீர நாவுகளாகி தப்புகள் சொன்னாலும் மூன்றாம் கண் திறக்காத முப்பொழுதோர்கள் நாம்.
பயணம் முடிவதில்லை.
காலையெனும் ஆறுதலுக்கு கதறியழும் பிள்ளைகள் நாம்.
விடியலுக்காய் தவம் செய்யும் விழிகளின் ஒரு சொட்டு கண்ணீரில் அசையாத இதயமே நம் துணையென்றாலும், பூத்துப்போகும் கண்களிலும் நாமிருப்போம் என்பதை சொல்லி விட்டு செத்துப்போவதே விடியலென்றால் அதுவே ஆறுதலாகட்டும்.
காலையெனும் ஆறுதல், காதல்!
A Gladys Stephen teary in the morning!
Comments
Post a Comment