ஞாயிறு.
ஒரு இயற்கை நியதியை மிக சாமர்த்தியமாக மத அடையாளமாக்கி விட்ட பொது மனம் அபார வலிமை கொண்டது.
தங்கள் உச்ச சிந்தனைகளின் வெளிப்பாட்டை வாரந்தோறும் மூளைகளுக்குள் திணித்து விசுவாசமென்ற பெயரால் மரபு சார் நம்பிக்கை வளர்க்கும் கொல்லன் உலைக்கூடம்தான் வழிபாட்டு ஞாயிறுகளென்றால் இயல்பாய் ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிப்பதும், அன்னமிடுவதும், காயங்கட்டி களிம்பு தடவி கரிசனம் காட்டுவதும் என்ன?
சாலை விதி மறந்து, நோ பார்க்கிங்கில் வாகனம் நிறுத்தி, பீஃப் பற்றிய ஞாபகங்களுடன் நடக்கும் பிராத்தனைகளும், திருவிருந்துக்காரர்களின் ஆடைப்பின்புறங்களின் ஆலோசனைகளும்தான் தியான நேரமென்றால்...
எனக்கு அந்த காலை நேர ஏழைத்தாயின்
" அம்மா பசிக்குதும்மா ... "
பெரும்பூஜையொலி.
பெரும்பூஜையொலி.
நானே கடவுள், என் பத்து ரூபாய் கருணையே அருள்.
போதும்.
உங்கள் ஞாயிறின் வியாக்கியானங்களை நீங்களே நம்பாதபோது.
என் மானுடம் மீதைய என் நம்பிக்கை என் ஞாயிறுகளைக்காக்கும் .
திங்கள்களை சனி வரை தரும். ஆமேன்!
திங்கள்களை சனி வரை தரும். ஆமேன்!


Comments
Post a Comment