தெளிவு
காலைகள் தெளிவானவை.
தெளிவதற்காகவே காலை.
இரவற்ற பகல்களாகவே இருந்து விட்டால் தான் தெரியும், இருளின் அருமை.
விடியாமலேயே போய்விட்டாலோ, இருளே கொடுமை.
இந்த விடியல் தெளிவானது.
நிர்மலமானது.
சுத்தமானது.
புதிதானது.
நேற்றின் குப்பைக்குழப்பங்களற்ற புத்தம் புதுக்காலையிது.
அதே வேலை, அதே மனுஷி நான் ஆனாலும்...
புத்துணர்வு, புதுப்பொலிவு, பேரன்பு.
எனக்குள் நான் பூசும் அரிதாரங்கள் வேதிமக்கலவையன்று, இயல்பணி, இருப்பணி, அழகாயிருக்கவென்ற மெனக்கெடல்களற்ற அவதாரம் என் அரிதாரம்.
தெளிவாயிருக்கின்றேன் என்ற கர்வமே என் நம்பிக்கை.
அந்த நம்பிக்கையில் ஒவ்வொரு காலையும் புதிதே.
தெளிவான காலை வணக்கம்!
A Gladys Stephen clear morning!
Comments
Post a Comment