கோவில் மணி.













மனிதம் ஆராதிக்கப்பட வேண்டிய மதம்.
ஒவ்வோர் உயிரும் தெய்வத்துவம்.
உணர்வுகள் போற்றுதற்குரியதாயிராவிட்டாலும் சிந்தனைக்குரியது.
ஒவ்வோர் வாழ்வும் ஒவ்வோர் தவம்.
அட்சயப்பாத்திரம்.
அள்ள, அள்ள குறையாத காயசண்டிகைக்கலம்.
எதிர்பார்ப்பு, ஏக்கம், நிராசைகள் என ஏராள, ஏராளங்கள்.
ஒரு இரட்சக வருகைக்கான எதிர்பார்ப்புகளாய் ஏராள யுகங்கள்.
வாராத வாய்ப்புகளுக்கான ஓட்டங்களாகவே மானுட நகர்வுகள்.
ஆனாலும்...
நிராசையிரவுகளின் நீட்சியாயிராமல், நல்லவை நடக்கும் என்ற நம்பிக்கையாகவே ஒவ்வோர் பகலும் மானுடத்தின் முகத்தில் விடிகின்றது.
அம்மானுட மகத்துவர்களின் காலையின் சங்கீதமாய், நம் அன்பின் செயல்கள் நிலவட்டும்.
இந்நேய ஆராதனைக்கு என் காலை வாழ்த்து கோவில் மணியெனிற் அதைக்கொண்டாடுங்கள்!
மானுடம் வாழ்க!
Gladys Stephen humanitarian morning bell!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.