நமக்காய் ஓரிடம்..
நமக்காய் ஓரிடம் கண்டிப்பாய் உண்டு.
தேடினாலும் ஓடினாலும்.
கனவுகள், காத்திருப்புகள் தாண்டி.
கிடைக்குமா கிடைக்காதா என்ற கவலைகள் தாண்டி, நம் இடம் நமக்கே உண்டு.
கிடைத்தவர்க்கெலாம் அதுவே இடம்.
நமக்கு வேண்டாம் அவ்விடம்.
கால்வலிக்க நின்றாலும், கைவலிக்க நின்றாலும் நமக்காய் ஓரிடம் நாளையாவது உண்டு.
நமக்கோ கைகளும் கால்களும் உண்டே?
இல்லாதவர் இருந்து விடட்டுமே.
பிள்ளை சுமப்பவள், பிள்ளையைச்சுமப்பவள், பின் முதுகு வலித்தவர், பிற வலிகள் சுமப்பவர் இருந்து விட்டு போகட்டுமே.
காத்திருப்புகளும், வலிகளும் நிரந்தரமன்று.
நமக்காய் ஓரிடம் தரணியில் உண்டு.
நமக்கென அமையும் வரை காத்திருப்பதும் நன்று.
இருக்கின்ற இடம் தாண்டி பறப்பதும் நன்றன்று.
காலைகள் விடியும், கடமைகள் அழைக்கும் கால்கடுக்க நின்று காத்திருந்த பேருந்து கண்டவுடன் ...
எனக்கான சீட் கிடைத்தவுடன் ...
அப்ப்பா ...
அந்த மகிழ்ச்சியில் மனம் திளைக்கின்றது.
ஆனாலும், ஆங்கோர் பாட்டி கைவலிக்க மேல் கம்பி பிடித்து தொங்குகையில், இடுப்பில் குழந்தையுடன் தாயொருத்தி தவிக்கையில் ...
என் மனம் வலிக்கின்றது!
Gladys Stephen got the seat in the crowded bus !
Good morning to all !
Comments
Post a Comment