என்னைக்கரைத்தல்.
தன்னைக்கரைத்து மாலை. என்னைக்கரைத்து கனவீடேற்றம்.
நானே கடன்காரி, வாராக்கடனாய் வாரந்தோறும் என்னிலிருந்து.
தேவையில்லாது, தேவையற்றோருக்கு தேடிப்போய், தேவைகள் சந்திப்பதாய் தேவையேயில்லாமல் தேம்பாதிருங்கள்.
நான் கறிவேப்பிலை ஊறுகாயல்ல. காட்டுச்செடி!
நேசகொடிதங்களும், துரோகக்கண்சிமிட்டல்களும் கண்ட நாடோடிக்கூடாரம்.
நேசகொடிதங்களும், துரோகக்கண்சிமிட்டல்களும் கண்ட நாடோடிக்கூடாரம்.
நன்மை செய்து மாய்வேனாகில் என் விழித்திரை வழியே வெளித்திரை காண்பேன்.
உள் பணக்காரியாய் ஒப்பனை செய்வதை விட, வெளிப்பாரியாய் முல்லை என்தேரில்.
என்னைக்கரைத்தல் பாவமெனிற்
நானும் மெழுகுவர்த்திகளுமே பெரும்பாவிகள்தான்.
நானும் மெழுகுவர்த்திகளுமே பெரும்பாவிகள்தான்.
சூரியனுமே.
நிலவு ஒரு பெண்ணாகி அழகாய் உலவ உன்னைக்கரைத்தலே நியாயம் சூரியா!
A Gladys Stephen elegiac!

Comments
Post a Comment