நலம் வாழ ஞாயிறின் வாழ்த்துகள்

🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅

ஒவ்வொரு ஞாயிறிலும் தீர்மானங்கள்.
சனி வரை சாதிக்க இயலாதவைகளுக்கான தீர்மானங்கள்.

வாழலின் ஆசைகளற்றவர் யாருமில்லையே?
நமக்கே நமக்கானவைகளின் ஆசைகளுக்கெல்லாம் பிறர் சார்பென்பது தவிர்க்க முடியாததாகி போய்விட்டதே.

ஒரு போஸ்டிங்கிலும் கூட லைக்குகளும், கமன்டுகளும், இதய ஸ்மைலிகளும் எதிர்பார்த்துத்தானா ஆன்ட்ராய்ட் செதுக்கல்கள்?

எனக்குள் நான் நடத்தும் இதய வேள்விகளின் விடைகளுக்கு கூட பிறரங்கிகாரமென்பதின் இச்சை மனுஷ்யசார்பே.

சார்பற்ற வாழல் என்பதின் தவங்களில் ஞாயிறுகளின் உட்சம்பாஷனைகள் திவ்ய ஆராதனை.

வழக்கம் போல பழக்கமான ஞாயிறின்   கடமைகள், நீங்களும் நானும் செய்பவை,, செய்ய விழைபவை.

ஆனாலும்...
எப்போழ்தும் ஓர் ஏக்கம் 'இந்த வாரம் இனிதாயமையட்டுமே'.

நம் எல்லோருக்கும் வரும் வாரம் நலமாயமைய வாழ்த்துகின்றேன்.

சார்பற்றிருக்கக்கருதினாலும் பிறர் வாழ நினைப்பதில் சார்ந்திருப்பதே சாலச்சிறப்பு!

A Gladys Stephen Sunday prayer!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.