வானுயர்ந்த சோலை
நினைவுகள் சோலை.
உணர்வுகள் பூக்கள்.
ஒவ்வோர் காலையும் நம்மை உயிர்ப்பிக்கும் நினைவுகளாலேயே துவக்கப்படுகின்றோம்.
சில நினைவுகள் நம்மை வாழத்தூண்டுகின்றன.
சில ஞாபகங்கள் நம்மை எச்சரிக்கின்றன,
குற்றம் சாட்டுகின்றன.
வாழல் மீதைய அன்பு மட்டுமே நம்மை இயக்குகின்றது.
இணைந்திருப்பதே அன்பு.
பிரிவாற்றாமையிலும் பிரியாதிருப்பதே அன்பு!
இணைந்திருங்கள், ஒத்திசைவுடனிருங்கள்.
வாழ்வை ஆனந்தமாக்குங்கள்.
சில வார்த்தைகள், வாழ்வுச்சம்பவங்கள் நம்மை திகைக்கப்பண்ணினாலும் அதனினின்று கிழித்தெறிந்துப்புறப்படுவதே வாழ்வு.
நம் நிஜமெனும் நம்பல்களுக்கும் , நிஜமான நிஜங்களுக்கும் உள்ள யதார்த்த வேறுபாடுகளை உணர்ந்து கொண்டாலே முரண்பாடுகள் இல்லை.
முறு முறுப்புகளுமில்லை.
பார்வைகளின் விசாலத்தினால் மாத்திரமே மானுட வாழ்வின் பயணங்கள் வானுயர்ந்த சோலையூடேயா அல்லது வனாந்தர பாலையூடேயா என்று தீர்மானமாகும்.
வானுயர்ந்த சோலையூடே இந்த நாள் பயணமாகட்டுமே.
வாழ்த்துகள்!
A Gladys Stephen valley song!
Comments
Post a Comment