கோழி முட்டை.
குளிரின் கதகதப்பாய். வலிகளின் மறைப்பாய்.
கனவுகளுடன் கண்மூடி நனவில் எழுகின்றேன்.
புதைந்தவைகளை புதைத்துவிட்டு ஓடுடைத்து எழுகின்றேன்.
புதிதாய் பிறக்கின்றேன்.
ஒவ்வோர் விடியலும் ஜனனம்.
ஒவ்வோர் விடியலும் ஜனனம்.
என் நனவுகளின் பயணம்.
முடிவிலாது பயணிக்கும் மனிதத்தின் பிரதிநிதி நான்.
முடிவிலாது பயணிக்கும் மனிதத்தின் பிரதிநிதி நான்.
நிற்காது செல்லும் மானுட நகர்வுகளின் ஒவ்வோர் இரவிலும்,
முடக்கும் முட்டையோட்டு துயிலெழுந்து விடியல் காண்போம் வா!
முடக்கும் முட்டையோட்டு துயிலெழுந்து விடியல் காண்போம் வா!
சின்னக்குழந்தையாட்டம் சிறகு விரிப்போம் வா!
அதிகாலை சுபவேளை, என் ஓலை வந்ததே
😀!
A Gladys Stephen morning!

Comments
Post a Comment