விடிந்தது!
எல்லாருக்குமாய் விடியும் விடியல் விடிந்தது.
நேற்றின் குளிர் போர்வைகள் விடை பெற்றன.
மஞ்சளும் சிகப்பும் தடவி வெளிச்சக்கீற்றின் விரல்கள் பூமியெங்கும்.
ஊரையெழுப்பும் பறவைகளின் ஆரோகணங்களில் ஒத்திசைவு சுரங்களோடு உலோகவுயிரினங்களின் உறுமல்கள்.
காஃபிக்கள், டீக்கள், காலை பதிப்புகள்.
கடமைகள், கனவுகள், காத்திருப்புகள் & பிராத்தனைகள்.
நலம் வாழ வாழ்த்தும் நல்ல வார்த்தைகள்!
உடல், பொருள் & ஆவியெங்கும் வாழ்வாசைகள்.
ஒவ்வொரு விடியலும் நற்செய்தி.
இன்னொரு நாள்.
இன்னொரு வாய்ப்பு!
இன்னொரு வாய்ப்பு!
எதிர்பாராதவைகளைப்பற்றிய எதிர்பார்ப்புகளற்ற விடியலாய் விடியலோடு விடிந்ததே நம் விடியல்.
என்றாலும் நன்மைகள் விளைவதும், விழைவதுமே விடியலின் வாழ்வின் நடைமுறை.
விழையும் நன்மைகள் விளைய வாழ்த்துகள்!
A Gladys Stephen hope!
And wish you all a good morning!

Comments
Post a Comment