மாலை எனும் தோழி
ஒவ்வொரு மாலையும் என் தோழியே.
பரஸ்பரம் இருவரும் சந்திக்கும் கணங்கள் கொஞ்சமே.
சீக்கிரம் இருள்காரன் வந்தவளை கவர்ந்து செல்வான்.
இருப்பினும், இருவரும் கைகோர்த்து செல்லும் கணங்கள் அருமையானவை.
எனக்கு அவள் துணை.
அவளுக்கு நான் துணை.
அவளுக்கு நான் துணை.
பிரிவாற்றாமை என்பது பெருந்துயரேயாயினும்.
நீ பிரியமுள்ள தோழி.
நீ பிரியமுள்ள தோழி.
விக்ரமாதித்ய நேசம் நம் மாலைப்பொழுதின் சந்திப்பு.
வேதாள கணங்களைத்தாண்டியும் நம் சந்திப்புகள் தொடர்கின்றன.
இதயங்கள் பரிமாறிக்கொள்ளும் பேச்சுக்களின் மௌனத்தை புன்னகைகளால் வளர்த்துக்கொள்வோம்.
ஒரு தாயாட்டம் என்னை மூடிக்கொள்ளும் உன் சந்தியாபோர்வைகளின் கதகதப்பில் கண்ணயர்கின்றேன்.
நேசம் உணர்த்தும் உன் கூந்தல் பூக்களின் வாசமே என் சுவாசம்.
ஒவ்வொரு விரைவுமாலையிலும் உன் வரைவன்பு வற்றாத ஊற்று.
கனமாகி வந்த பொழுதெல்லாம் இதமாக்கி, இலேசாக்கியனுப்பும் உன் கீலியாத்தின் எண்ணெய்க்காகவே ஒவ்வொரு பகலிலும் பிறக்க ஆசை.
சென்று வருகின்றேன் மாலையே...
நாளையும் வா...
வருவேன் நானே !
வருவேன் நானே !
A Gladys Stephen evening!

Comments
Post a Comment