கடல் கோள்.
🏝🏝🏝🏝🏝
கொண்டு போன ஓக்கியின் வலி, ரணம் ஆறாதது.
கடலலை கால் நனைக்கும் காதலியின் தங்கச்சங்கிலி காலழகு!
அவள் இதுவதுவெல்லாமேயழகு.
கடலழகா?
அது சுருட்டித்தின்ற கொலையழகா?
" ஓக்கி" ஒரு துன்பியல் சம்பவம்.
அதை மறந்து விடுங்கள்.
இல்லையேல் அது மறுத்துப்போகட்டும்.
இல்லையேல் மறக்கடிக்கப்படுவீர்கள்.
யாரும் வரலியே ,
என்பது கூக்குரல்.
யார் வரவேண்டுமென்பதே இப்பாக்குரல் .
கடலம்மா, நீ கர்த்தரின் அம்மா!
கர்த்தரம்மா.
காத்தியா, அம்மா?
மௌனமாய், இன்னொரு சுனாமியாய், வந்து ஆள் விழுங்கிப்போனாயோ, கடவுளே ?
இல்லை, உனது பெயரால் எழும் நாடாளும் வித்யையில் மனிதர்கள் மூடர்களாகினரா?
பரமண்டல ராச்சியங்கள், சுகர் பேஷன்டுகளுக்கு சப்பாத்தி பிசைந்து கொண்டு இருந்தனவா?
கடல் கொள்ளல் சம்பவமா, துயரமா?
சோதனைக்குட்படப்பண்ணாமல் தீமையிலிருந்து ரட்சிக்க சொல்லித்தந்தவரே, சொல்லித்தந்தவரே, ஏன் எங்களை கை விட்டிருந்தீர் ?
காவு கொண்ட புள்ளையின் காதுகூட கெடைக்கலியே.
தங்கச்சதங்கைக்காதலியே, என் ராசாத்தி, சாயங்காலம் பீச்சில பாத்து டூயட்டு பாடடியம்மா, என் பிள்ளை பாடி கிடைச்சா சவுட்டிறாத, அம்மா!
கடல்கோள் கண்டவனக் காணோமே...!
A Gladys Stephen Sea-logue.
Comments
Post a Comment