தமிழ் மாலை.

சூடிக்கொடுத்த ஆண்டாளின் தமிழ்.
திருவில்லிப்புதூர் கோபுர கலசம்.
தமிழ்தரணியெங்கும் வாசம் வீசும் மாலை.
என்னையும் சூடும்.
நானும் சூடுவேன்.
அருகிருந்து கற்றுத்தந்தவர் ஆருமில்லை.
ஆரணங்கு ஆபரணங்கள் ஏதுமில்லை.
அம்மாவின் முத்தங்களாய் வந்துதித்த சப்தங்களில்
நான் தொடும் எழுத்தாணிகளின் பூமாலை என் பாமாலை.
யாருமற்ற வெளியில் நான் நடந்த போது உள்ளிருந்து ஓயாது உச்சாடனம் செய்த அழகர் கவிதை இந்த மீரா பஜன் !
காதலாம் கண்ணீரில் கசிந்துருகும் காளையர்காள்,
அழகாம் ஓவியமாய் அணங்காகும் தேவதைகாள் தமிழ் பேசி தரணி வெல்லுங்கள்.
மணக்கும் தமிழால் மயக்குங்கள்.
மாலை கூட்டும் வேதனையிலும் தமிழால் ஆறுதல் கொள்ளுங்கள்.
தமிழ் மாலை சூடும் ஒவ்வொரு பெண்ணிலும் இந்த க்ளாடியின் வாசமிருக்கும்.
நானே ஆண்டாள், ஆள்பவள்.
ஆளப்போகின்ற எல்லா மாலையிலும் என் மொழியின் விழியிருக்கும்.
Gladys Stephen தமிழாரம் !

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.