காத்திருந்த காலை.

காலைகளாம் பயணத்தில் காத்திருக்கும் சக மனிதர்தம் கவலைகளெல்லாம் சாய்ந்திருக்க ஓரிருக்கை.
எப்ப வருமோ பேருந்தென்பதோர் கவலையென்றாலும், உட்கார இடம் கிடைக்குமா என்பது இன்னோர் கவலை.
மானுட கவலைகள் ஏராளம்.
சாதாரணர் கவலையெல்லாம் கால்வலிக்காத பயணங்கள்.
நடத்தலே வாழ்க்கை, நடப்பதே வாழ்க்கை. நடையாயே வாழ்க்கை.
நடை பிணங்களென நாம் சொல்லும் நடைமுறை வார்த்தை வழக்காறு நெஞ்சைக் கொல்கின்றது.
அவர்கள் மனிதரே!
சாதாரண தேவைகளன்றி பேராசைகள் முயலாத பெருங்கூட்டமொன்று இன்னமும் சாலைகளில் பின்னங்கால் தவமிருக்கக்கண்டால்,
ஒரு புன்னகையால் குட் மார்னிங் சொல்வோமே!
இந்த தேசம் அவர்களாலேயே இயங்குகின்றது.
Gladys Stephen co-passenger concerned morning!.

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.