காலைத்தென்றல்
தென்றலும் காலையும் இணைபிரியாதவை.
தேகம் தொடும் காற்றின் ஸ்பரிஸம் இதமாயெழுப்பும் விடியலில் புயலாய் கனன்ற கணங்கள் அகன்று செல்லும்.
வல்லினங்களற்ற மெல்லினமாயே ஒவ்வொரு காலையும்.
ஜீவனின் மூச்சில் மெல்லினங்களை உச்சரிப்போம்.
அன்புச்சொற்களில் ஆனந்தம் செய்வோம்.
நாமெலாம் இடையினம்.
அன்பாம் வேதத்தில் நல்லினமாவோம்.
அன்பாம் வேதத்தில் நல்லினமாவோம்.
மென்காற்றே வா!
இந்நாளில் வா!
இந்நாளில் வா!
A Gladys Stephen gentle wind!

Comments
Post a Comment