நானாதல் நலமே.
கணக்குகள் தாண்டி. கவலைகள் தாண்டி.
நானாதல் தகுமோ ?
நானே நானாய், என் எண்ணங்கள் விரியும்.
நானே நானாய், என் எண்ணங்கள் விரியும்.
நீயாய் வந்தெனைச்சூழ்ந்ததெலாம், கனவன்று.
ஒரு நனவின் அமைவு.
ஒரு நனவின் அமைவு.
தூர தீர்மானங்களில் தூண்டிலற்று மாட்டிக் கொண்ட தன்னார்வ தவம்.
விரும்பியே வலையாகி, இரையான டிஸைன், நம் நாட்கள்.
நானே நானாதல் தகுமோ?
ஒரு தேடலின் முடிவாய் உன் முகவரியின் முதலெழுத்தை எப்போழ்து பார்த்தேனோ, அப்போழ்தே என் தீர்மானமற்ற பிறவியின் பாஸ்வேர்டை கண்டுகொண்டேன்.
ஒரு தேடலின் முடிவாய் உன் முகவரியின் முதலெழுத்தை எப்போழ்து பார்த்தேனோ, அப்போழ்தே என் தீர்மானமற்ற பிறவியின் பாஸ்வேர்டை கண்டுகொண்டேன்.
நானே நானானதில் நீ தானே ஒரு மாலைச்சூரியன் ?
மஞ்சள் நாயகன்李❤️.
மஞ்சள் நாயகன்李❤️.
என் சந்திர முகத்தில் நீ எழுதும் தந்திர சுந்தரத்தை தூரிகையாக்கி ஆன்மாவில் வாசிக்க, நானே நானாதல் தகுமோ ?
A Gladys Stephen மாலைக்குயில் பாட்டு.
ஒரு சொக்கேச பாமாலை!
ஒரு சொக்கேச பாமாலை!

Comments
Post a Comment