ஒரு பயணத்தின் முடிவில்
ஒரு பயணத்தின் முடிவில் தொடங்குகின்றது இன்னொரு பயணம்.
நேசத்தின் பயணங்களுக்கு முடிவில்லை.
வைத்த இடத்தில் வளர்வேன், உரமாவேன், உயிர் தருவேன்.
அன்பின் செயல்கள் அத்தனையும் தருவேன்.
ஒவ்வோர் பயணத்தின் முடிவிலும் இன்னொரு பயணத்தின் துவக்கமிருக்கின்றது.
அதனால்தானோ என்னவோ பயணங்கள் பிடித்திருக்கின்றது.
காட்பாடிப்பயணம் முடிகையில் துவங்குகின்றாள் பவானி !
பவானி முடிகையிலும் இன்னொரு சரஸ்வதி தார்பாலை வனத்திற்க்குக்கீழ் பயணமாகிக்கொண்டிருக்கலாம்.
இல்லையேல் பகீரதன் கொண்டு வந்த ஆகாச கங்கையாயிருக்கலாம்.
ஐம்பூத கணங்களிலும் என் பயணம் முடிவுறாது. நான் ஓர் ஓட்டப்பந்தயக்காரி!
இலக்கு மட்டுமே என் கண்களில்.
மற்றதெல்லாம், வரலாறே !
A Gladys Stephen genre of travel!
Comments
Post a Comment