தடையற தகர்
மாலை நெருங்குகையில்.
சோர்வுகள் சோதிக்கையில்...
தடையற தகர்.
அதே வேலை, அதே பேருந்து அதிக கூட்டம்.
அதே சோர்வு. அதே சன்னலோர அநேர் காட்சிகள்.
தடையற தகர்.
தூரம் அதிகமில்லை. வான் கூட தொட்டுவிடும் தூரம் தான்.
வீடென்ன தொலைவா?
வாட்டமெல்லாம் விரட்டியோட்டு.
பகிர்தலுக்கான பதறல்களாய் பெருமூச்சுகளின் மூக்குப்புடைப்புகள்🤣.
சிவந்த கண்கள்,
சீறிய முகம்.
உடலும்-உள்ளமும்-உணர்வுகளும்-உணர்ச்சிகளும்
குவிந்த நமக்கு நினைவுகளெனும் எதிரிகள் எம்மாத்திரம்.
தடையற தகர்.
ஊர் செல்லும் ஆசையென்பதும்,
வீடடைய வேண்டுமென்பதும் குறியீடுகளென்றால் அதன் திசைகாட்டிகளாய் நாமிருப்பதில் தவறில்லையே.
மனம் ஓர் போர்க்களம்.
உள்ளார் எதிரிக்கெதிரான போரில்...
தடையற தகர்.
வேதனை கூட்டும் மாலையை வெற்றியாய் சூட்ட தடையற தகர்.
A Gladys Stephen evening psalm.
Comments
Post a Comment