மல்லிகை.
வாசம் முன்பேயுள்ளது, அதன் அனுபவம் புதிதாயின், அது தரும் மகிழ்ச்சி புதிதாயின், புதுவாசமே.
சூடும் மல்லிகையின் வாசமா என்னமோ தெரியாது, புதுச்சேலை ஸ்பரிஸமோ தெரியாது.
இந்தக்குதூகலம் பெண்பால் குதூகலம்.
இந்த மகிழ்ச்சி பெண்மனதின் மகுடம்.
இந்த மகிழ்ச்சி பெண்மனதின் மகுடம்.
மென்மையான வன்மையாளுக்குள்ளும் நந்தவன ஞாபகங்கள்.
சில அழகியல்கள் வாழல் சம்பந்தப்பட்டது.
பெண்ணாள் வாழ்வியலின் அழகியல்களையும் நளினங்களையும் போற்றாத மானுடம்,
ஆணாதிக்க அரக்கத்தின் உக்கிரமே.
பெண்ணாள் வாழ்வியலின் அழகியல்களையும் நளினங்களையும் போற்றாத மானுடம்,
ஆணாதிக்க அரக்கத்தின் உக்கிரமே.
பெண்ணைப்போற்றுங்கள்.
மல்லிகை அவள்!
மல்லிகை அவள்!
A Gladys Stephen Jasmine song !

Comments
Post a Comment