திருச்சூரில் திருமணம்.

இன்று அகிலுக்கு திருமணம்.
என் குடும்பத்தில் ஒருத்தி, அவள் குடும்பத்தில் என்னை இருத்தி.

உடனிருந்தவர்தாம் உறவுகளா?
ஆத்மாவின் ஒத்திசைவால் ஒட்டிப்பிறந்த இரட்டையருக்கு பெயர்கள் தேவையில்லை.

ஆத்ம துடிப்பு, நினைவுப்பிணைப்பு.

சுகம், துக்கம் எல்லாவற்றிலும் இரண்டற கலந்த ஒரே பேச்சு அவள் அக்கா Kavitha Satheesh, என் தோழியின் பேச்சு.

இதயப்பூர்வமான உணர்தலை நான் வார்த்தைப்படுத்த நினைத்தால் தோல்வியே மிஞ்சும்.

சொல்லப்படாத கணங்களில் உணரலாவதே நட்பு.

அவள் மடியாம் தலையணைகளில் எழுதப்பட்ட என் துயர வரிகளின் முடிவுரைகளில் சுபம் அருகும்.

தாய் தேடும் வேளைகளில் அவள் தாலாட்டு.
விம்மியழும் நேரமெல்லாம் அவளொரு பாலைச்சோலை.

கண்டிராத சுமை தாங்கி,
கண்டு கொண்ட நிழற் தாங்கல்.

உயிரின் அருமை தெரிந்தவர்கள் நட்பாயிருப்பார்கள்.

நட்பில் உயிரிருக்கும்.
உயிரோடு தொடர்புடைய ஒரே இயற்கையமைவு நட்பு மட்டுமே.

திருச்சூர் திருமண வீட்டிலிருந்து A Gladys Stephen Merry moments!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.