பரஸ்பர புரிதல்
ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல மனித உறவிலும் இரண்டு தரப்பிற்கான புரியல் என்பதே எல்லா பகல்களுக்கான விடியல்.
குரோதங்களுடன் மூடப்படும் போர்வைகள் விரோதங்களையே பிரசவிக்கும்.
பரஸ்பர வாத பிரதிவாதங்களாலேயே நிறைய மனமண முறிவுகள்.
உன் குற்றம் கண்டு விட்டேன் என மார் தட்டிக்கொள்ள இது என்ன எல்லைப்போரா?
ஒவ்வொரு வாக்குவாதத்திலும் முடிவு நான் உன்னை நேசிக்கின்றேன் என்பதானால், கடவுளிருப்பதாக கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளலாம் கண்மணியே.
நான் சொல்வதே சரி நீ நினைப்பதெல்லாம் தவறு என்ற மனப்பாங்கு ஒழியாத வரை மூன்றாம் உலகப்போரை தவிர்க்கவியாது.
ஒரு சமாதானமான குட் நைட்டில் சந்தோஷமான குட் மார்னிங் ஒளிந்துள்ளது.
அகமாற்றங்களுக்கு நிலையங்கள் தேவை.
மன மாற்றத்திற்கு மனசு தான் தேவை.
திறந்த மனதாய் நித்திரை கொண்டவர்க்கு எல்லா காலையும் கதவருகே "குட் மார்னிங்" சொல்ல பூங்கொத்துடன் காத்திருக்கும்.
A Gladys Stephen Good Morning!
Comments
Post a Comment