எங்கே எனது கவிதை ?

நெஞ்சோடணைத்து, உச்சி மோந்து, 
தாயாகி எனைத்தாங்கி, உள்ளுக்குள் வாழும் கவியே, 
எங்கே என் கவிதை?
கண்ணுக்குள் தான் வாழ்ந்து, காதுக்குள் தான் பேசி, 
விழுகையில் தாங்கி, விடிகையில் வந்து
கவிதைகள் பேசும் கலையே எங்கே என் கவிதை?
நீ என்றும், நானென்றும் வேறில்லையே, 
நாமென்று சொன்னவனே எங்கே என் கவிதை?
விடிகையிலும், அடைகையிலும் நீயாய் வந்தவனே , 
நானெங்கே என் கவிதையெங்கே?
தீக்குள் விரலை விட்டால் நந்தலாலா !
கவிக்குள் காதல் வைத்தால் நிந்தலாலா!
எங்கே எனது கவிதை?
மூச்சடக்கி முத்துக்குளிப்பாயோ என்னவோ, 
முப்பொழுதும் கவிதைகளால் என்னை முற்றுகையிடு 
இல்லையேல் முழங்காலிடு.
எங்கே எனது கவிதை?

Comments

Popular posts from this blog

ஓட்டம்

வலிமாலை...

உனக்காயொரு காலை.