மழைக்காலம்

வானம் திறந்திருக்கின்றது.
அவரவர் கடமைகள் வாய்த்திருக்கின்றது.
பகலவ பல்லக்கில் மானுடம் நகர்கின்றது.
பருவ கால மாற்றங்களூடே குடைகளும் பயணிக்கின்றன.
வானிலை மறந்த வேலைகள் வேகம் கற்பிக்கின்றன.
கண் முன் நீண்ட சாலைகளும் கைக்கருகும்.
தொடா வானமும் வசமாகும்.
நம்பாதவர்க்கும், நம்பியவர்க்குமாய் 
காலைகள் காத்திருக்கவே செய்கின்றது.
கடன் செய்தலே பணி, பணி செய்தலே கடன்.
அன்பிலோர் உலகமடங்கும் வரை அன்பாலே வெல்லும் நாட்கள்.
நிபந்தனைகளற்ற அன்பினாலே வெயிலும், மழையும்.
மாந்தளிர்காள் செழிக்க பெய்யெனில் பெய்யும் மான்சூன்!
Happy June!
Happy monsoon!

Comments

Popular posts from this blog

ஓட்டம்

வலிமாலை...

உனக்காயொரு காலை.