எரிதலாம் மௌனம்.

எரிதலாம் மௌனமெலாம் எனக்குள்ளே. 
புரிதலாம் புண்ணியத்தால் பேச்சுக்களை கைது செய்கின்றேன்.
ஆறுதலென்ற பேரில் "அவனை" நம்பென்ற 
தட்டக்கழித்தல் பதில்கள். 
புனிதமாக்குதல் போர்வையில் துயரங்களை 
தியாகமாக்கிவிட்டால் வாழல் மோட்சமாகி விடுமா?
இன்றின் வலிகளை மறுக்கத்தான் வேதவிசாரணைகளென்றால், 

சமூக கட்டமைப்புகளின் பாதுகாவலுக்கான பலி மேடை என் வாழ்வென்றால் 
இது அபத்தத்தின் விளங்காவோவியமேயன்றி வேறொன்றுமில்லை.
இருப்பவன் இல்லையென்கின்றான்; 

இல்லாதவன் இருக்கென்கின்றான். 
பொய்யாம் வாழ்தலில்தான் எத்தனை மெய்ப்பொய்கள்?
ஊனுடம்பின் ஓயல் வரை எத்தனை சால்ஜாப்புகள்!
தெரிந்தே சொல்லும் பொய்களாய் ஆறுதல் வரிகள்.
ஆறாதெனத்தெரிந்தும் அருமருந்து வாசகங்கள்.
அமர்ந்திருந்து ஆழ்ந்தலில் எரிதலாம் மௌனமே என் பேச்சு.
என் மூச்சின் பேச்சு !

Comments

Popular posts from this blog

ஓட்டம்

வலிமாலை...

உனக்காயொரு காலை.