நீங்கா நினைவுகள்

நீங்கா நினைவுகள் நெஞ்சில் நிறைந்திருக்கும்.
அதில் தூங்கா ஞாபகங்கள் நீந்தியிருக்கும்.
பதில் பேசா பேச்சுக்கள் 
பதுங்கியிருக்கும்.
பேசாத மௌனங்களில் ஓசைகளிருக்கும்‌.
அதை கேட்காத காதுகளுக்குள் இதயம் துடிக்கும்.
இதயத்தில் நீ, இமைகளுக்குள்ளும் நீ.
எங்கெங்கு நோக்கினும் உன் முகம் 

எப்பக்கம் பார்த்தாலும் உன் பிம்பம்.
பித்த சித்தமே, புத்த சப்தமே, 

பொருள் குற்றம் தேடா நக்கீர யுத்தமே.
முத்தயுத்தமாய் என்னைக்கொல்ல 

இன்னோர் ஏதேனிலும் பழம் தின்போம் வா!

Comments

Popular posts from this blog

ஓட்டம்

வலிமாலை...

உனக்காயொரு காலை.