கூந்தலில் முடிந்து வைத்த சூரியன்!

ஆதங்கங்கள் அற்ற வாழ்க்கையில்லை.
ஆற்றாமைகள் இல்லாத வாழ்க்கையில்லை. 
இரண்டையும் வெல்லாமல் போவதில்லை என்ற தீர்மானமே உறுதி. 
இறந்த இறப்பை பேசுதலென்பது விழலுக்கிரை நீர்.
வரும் வருங்காலமென்பது கானல்.
நிகழும் இன்றில் நன்று படலே என்னாற்றுப்படை!
எழுக !
வீழ்வெலாம் விபத்தென்றே இருக்கட்டும்.
நம்பிக்கை என்பது எதிர்பதங்களற்ற சிந்தனை மட்டுமன்று 

நேர்படும் சொல்லும்-செயலும்.
சூரியனற்ற வானை சொக்கவைக்கும் சந்திரச்சுடர் கூட சூரிய இரவலே.
சாயாக்களின் மாயங்களே, பாவனைகளின் சாதனைகளே கலையும்-வாழ்வும்.
வாழ்க. இறுதிவரை வாழ முயல்க .
அஸ்தமனம் என்பது ' அவ்வளவு தான்' என்று முடிவதல்ல.
'நாளை விடியும் ' என்பதன் அறிகுறி.
சில பூபாளங்களின் விதைகள் அஸ்தமனச்சிவப்பிலும், அடரிருட்டிலும் தான் கருத்தறிக்கின்றன.
இருள் விலகும்.
ஒளி படரும் என்பதே பகல்களுக்கான நம்பிக்கை.
Celebrate darkness to face the light !
Unless there is darkness there is no word ' Light '.

Comments

Popular posts from this blog

ஓட்டம்

வலிமாலை...

உனக்காயொரு காலை.