திரும்புகின்றேன்

ஓய்வற்ற பகலின் கடமைகள் முடித்து. திரும்புகின்றேன்.
முகத்திலறை காற்று முந்தானை முட்டும் பார்வை, 
முக்கிச்செல்லும் பேருந்தென தெரிந்த வழிகள். தெரிந்த பயணம். 
ஒருத்தியாய் என் பயணம்.
மனசுக்குள் கேள்விகள்.
பதில்கள் என்னவோ அவர்களின் பரலோகத்திலாம். .
என் கடிகாரப்பாதையின் கருத்துருக்கள் உங்கள் சமுதாய மேசைகளில் திருப்பியனுப்பப்பட்டாலும் என் அலுவலின் ஆணவத்தை விட்டு விலகேன்.
தன் மரியாதைப்பயணத்தில் எளக்கார எகத்தாளங்கள் எனக்கு தூசே.
சுய மரியாதை தாண்டிய சுக தேவதையன்று நான்.
சுழன்றடிக்கும் பத்ரகாளி.
சுட்டெரிக்கும் சூரியச்சுடர். நிலவென்று வர்ணித்தால் நிசப்தமாகி விட நானென்ன தென்மேற்கு பருவக்காற்றா?
மானுடத்தை புரட்டிப்போடும் மஹா புயல்.
வீடு திரும்பும் வேங்கைப்புயல்!!

Comments

Popular posts from this blog

ஓட்டம்

வலிமாலை...

உனக்காயொரு காலை.