விடை பெறும் கேள்விகள்.
நாளையில் நானோர் விடையாவேன்.
கேள்விக்கு வந்த பதிலாவேன்.
கேள்விகள் முடிந்த பதிலாவேன்.
கேள்விக்கு வந்த பதிலாவேன்.
கேள்விகள் முடிந்த பதிலாவேன்.
விடைபெறும் விடையாவேன்.
என் விடயங்கள் முடித்த நடையாவேன்.
என் விடயங்கள் முடித்த நடையாவேன்.
தனியாகவே நான் வந்தேன், தவறாதே நான் செல்வேன்.
புரியாத புதிரெலாம் புரிய வைத்து பிரிவாவேன்.
புரியாத புதிரெலாம் புரிய வைத்து பிரிவாவேன்.
எனக்கென்று எதுவுமில்லை. என்னால்தான் எதுவுமில்லை.
முன்னாடி வந்து நின்று புகழாரம் போற்றினாலும்
முன்னாடி வந்து நின்று புகழாரம் போற்றினாலும்
நானாக எதுவுமில்லை. எனதாக எதுவுமில்லை.
வாழலாய் நான் வருத்தங்கள் ஏதுமில்லை.
புன்சிரிப்பின் பொருளெலாம் புரிய வைக்க நானில்லை.
சிறகாய் என் பயணம். சிரிப்பாய் என் சாசனம்.
மானுட நாளில் நானோர் கடமை. வாழலின் போக்கில் வழமை.
மானுட நாளில் நானோர் கடமை. வாழலின் போக்கில் வழமை.
சந்திப்புகளும், சம்பாஷணைகளுமே நான்.
அதையும் தாண்டிய நானான என்னை நானறிவேன்.
என்னை யாரறிவார்?
பயணங்கள் தொடரும்,
பல்லவிகளும் தொடரும்.
மாறா உலகின் மாறா மாற்றமாய் நானும் தொடர்வேன்.
பல்லவிகளும் தொடரும்.
மாறா உலகின் மாறா மாற்றமாய் நானும் தொடர்வேன்.
எல்லோர் போலும், எல்லா காலையிலும்!
Comments
Post a Comment