நலமே நாளுமே
விடிகையிலும் விடாப்பிடிவாதமான நம்பிக்கை.
நன்மைகள் விடியும் . நலம் விளையும்.
தன்னந்தனியே நட்டாற்றில், நடுக்காட்டில் விடப்பட்டாலும்
நன்மைகள் நெருங்கி நலம் தான் நல்கும்.
நம்பிக்கை.
தெய்வதச்செயலிகள் செயலிழந்தாலும் , என் நம்பிக்கை வெல்லும்.
நானோர் காட்டுச்செடி, நாடோடிக்கால்,
வலியில் விளைந்த நெற்வயல்.
வருத்தங்கள் ஜெயித்த வானவில்.
என் மன வானின் கண்ணீர் நடுவேயும்
வண்ணக்குடை விரிப்பு, என் எண்ணத்தின் நீள் பரப்பு.
வானம் தொட ஏணிகள் தேவையில்லை எனக்கு.
விழிநோக்கி நான் பார்க்கும் தொலைவெலாம் வெல்வேன்.
வானமும் வசப்படும், இவ்வையகமும் கைக்கருகும்.
நம்பினோர்க்கெலாம் நம்பிக்கையே வாழ்க்கை !
நம்புக, நலமே நாளுமே.

Comments
Post a Comment