நீங்காதிரு
ஒரு சாதாரண வாக்கியம்.
கேள்வியா, பிராத்தனையா, கேவலா, ஹேஷ்யமா?
எதாகவும் இருந்து விட்டு போகட்டும்.
ஒரு உயிரின் விருப்புநிலைக்கான பதிலை
கேள்வியா, பிராத்தனையா, கேவலா, ஹேஷ்யமா?
எதாகவும் இருந்து விட்டு போகட்டும்.
ஒரு உயிரின் விருப்புநிலைக்கான பதிலை
திரும்ப திரும்ப கேட்டுக்கொள்ளலுக்கான சந்தர்ப்பமாக்குவதில்
கவலையா, சந்தேகமா இல்லை சங்கடமா?
எதுவுமில்லை.
உன் இருப்புக்கான விருப்பாயே என் கணங்கள் என்ற அறிக்கையா?
நலமே,
நீ இங்கு நலமே, என்பதை அங்கிருக்கும் என்னிடம் சொல்லிக்கொள்.
நீ இங்கு நலமே, என்பதை அங்கிருக்கும் என்னிடம் சொல்லிக்கொள்.
உருகலுக்கான உத்திரவாதங்கள் சொல்வதிலேயே காலங்கள் சென்றால்
உருக்குலைந்து போவேமே.
உருக்குலைந்து போவேமே.
மிச்சமிருக்கும் நாட்களின் நகர்வெலாம் நகர்த்திச்செல்,
தகர்த்துச்செல்ல நீ என்ன சேலச்சாலை மரமா?
நானென்ன கூலிக்குடைக்கும் ஜேசிபியா?
உன் பாதையில் செல்.
விலகமாட்டேன்.
உன் பாதையில் செல்.
விலகமாட்டேன்.
உத்திரவாதங்களால் நித்திரை கொள்.
அன்பென்பது எதிர்பார்ப்பன்று.
தர்மம்!
அறம்!
அறம் செய்வதே அன்பின் நிறம் !
அஃதெப்போழ்தும் மங்கலச்சிவப்பே.
என்னிதயம் போல்.
அன்பென்பது எதிர்பார்ப்பன்று.
தர்மம்!
அறம்!
அறம் செய்வதே அன்பின் நிறம் !
அஃதெப்போழ்தும் மங்கலச்சிவப்பே.
என்னிதயம் போல்.
Comments
Post a Comment