காலை ...
மெல்ல விழி திறந்து , சிறகுயிர்கள் குரல் கேட்டு,
இன்னும் துயிலேனோவென எழுதல் மறுத்தும்,
வாழ்வின் கடமைகள் 'வா மகளே ' என கரம் நீட்டியழைக்க,
சோம்பலாய் சிணுசிணுப்பாயெழுந்தாலும்,
கண்ணாடி முன் நின்று கண்கள் தான் பார்த்து,
தானே தான் சிரித்து ' குட் மார்னிங் ' சொல்லி விட்டு
நானேயறியாது நானெடுக்கும் ' பிரஷ்' ஷிலிருந்தே
வாழ்வின் வேகம் பழக்கமாய், வழக்கமாய்.
மாறாத வாழ்விலும் மாற்றங்களே மாறாதாம்.
மாறாத வாழ்விலும் மாற்றங்களே மாறாதாம்.
மாறி ,மாறி மாறாத மாற்றங்களாய், மாற்றங்களால் வாழ்க்கை.
ஒரு புன்னகை என்பது போர்வையா, முகமூடியா? நாமறியோம்.
அறியாதே நாம் சுமக்கும் முகத்தாலே கண்டுகொள்ளப்படுகின்றோம்,
அறியாதே நாம் சுமக்கும் முகத்தாலே கண்டுகொள்ளப்படுகின்றோம்,
முகத்தாலே முகவரிகளாகின்றோம்.
முகமும், அகமுமே வாழ்வின் முகவரிகளென்றான பின்
முகமும், அகமுமே வாழ்வின் முகவரிகளென்றான பின்
அகமலர்ந்து, முகமலர்ந்து நானும் சொல்வேன் ' காலை களிப்பாகட்டும்,
கடமைகள் சுகமாகட்டும்!'
Good morning!
Have a serene Saturday!
Good morning!
Have a serene Saturday!
Comments
Post a Comment