அதன் பிறகும்.
ஒரு சந்தியா ராகத்தின் யௌவனமாய் நினைவில்
நின்ற பெருங்காட்சிப்பொருளாய் உன் ஞாபகம்.
ஒரு மழைநாளின் குடையாய் நீ நனைந்து
என்னைக்காத்த தேம்பாவணித்தமிழ் நாட்கள்.
ஒரு ஒட்டடைக்குச்சியான என் மீதும்
பிரேமைகள் கொண்டு அழகாயிருப்பதாய்
சொன்ன அதிகபட்ச கவிதைகள்.
தூரம் தொலைந்த பிம்பம் தொடர்ந்து
புள்ளியான பின்னும் மனோவேகமெடுத்து
நீ வரைந்த வேதிமக்கோலங்கள்.
ஒரு பதின்வயதின் பதில்களற்ற கேள்விகளாய்
கேவல்களாய் முடிந்ததை நினைக்கையில்...
நாமெல்லாம் நாடோடிப்பாடல்களோவெனும்
கழிவிரக்கமெழுவதை தவிர்க்க இயலவில்லை.
காலச்சுவடுகளின் பாதை வழியே பயணம் போங்கள்...
அதன் பிறகும் ...
என்ற வாழ்க்கை இல்லாமலில்லை!
என்ற வாழ்க்கை இல்லாமலில்லை!
Comments
Post a Comment