காற்றில் ஓர் பயணம்
காற்றில் ஓர் பயணம். முகம் மோதும் கரும்புக்காற்று.
உள்ளுக்குள் எழும் கேட்காத கானங்கள்.
தூரத்து பறவைச்சப்தம்.
எங்கோ ஓர் இடிச்சப்தம்.
மழை வாசம், மண் வாசம் .
உள்ளுக்குள் எழும் கேட்காத கானங்கள்.
தூரத்து பறவைச்சப்தம்.
எங்கோ ஓர் இடிச்சப்தம்.
மழை வாசம், மண் வாசம் .
தனியே விழிகள். விழி விரிய நான் தேடும்
கானகம் நடுவேயும் கருங்காற்று.
ஒரு அமானுஷ்யத்தின் நிழலில் அமர்கின்றேன்.
அங்கேயும் அதரம் திறவா பைரவப்பறவைகள்.
அங்கேயும் அதரம் திறவா பைரவப்பறவைகள்.
எங்கேயோ ஒருத்தியின் பெருமூச்சில்
புறப்பட்ட புயல் கோவில் மணிகளில் கோலம் போட்டது.
மேகமறைவில் பகலவயாத்திரை.
மேகமறைவில் பகலவயாத்திரை.
காலம் தன் வேகத்தில் செல்கின்றது. நாமே கடந்து நிற்கின்றோம்.
ஆத்மாவின் ஒரே தேடலாய் உள்ளுக்குள்
கொலுவேற்கும் அம்மாவின் சுவாசம் நானோ?
உறைந்த சிற்பமாய் நீ மறைந்த கணங்களையும் தாண்டி
கரும்புக்காற்றில் உன் முகம். உன் முத்தம்.
கரும்புக்காற்றில் உன் முகம். உன் முத்தம்.
அம்மா !
விட்டு விலகா உன் ஞாபகங்கள் ஊனில், உயிரில்!
நீ இருக்கின்றாயம்மா.
இறப்பென்பது சம்பவமே.
இறப்பென்பது சம்பவமே.
இறவாமை சரித்திரமே.
எனக்குள் உலவும் அம்மாவே நீ என் அதிசயமே.
அம்மாக்கள் எல்லாவிடங்களிலும்!
எனக்குள் உலவும் அம்மாவே நீ என் அதிசயமே.
அம்மாக்கள் எல்லாவிடங்களிலும்!
Comments
Post a Comment