என்ன தவம் செய்தனை யசோதா?

ஒவ்வொரு நேற்றிலும் இன்னொரு நாளையின் கர்ப்பமிருக்கும்.
ஒவ்வொரு நாளையிலும் ஒரு இன்றின் மணியோசையிருக்கும்.
முக்காலமும் உன் நினைவிருக்கும்.
முப்பொழுதும் எப்பொழுதும் உன் பேச்சின் மூச்சிருக்கும்.
வாழ்வுக்கு நீ வைத்த பெயர் எதுவானாலும் இருக்கட்டும். 
என் பெயரில் உன் வாழ்வும்,
 உன் பெயரில் நானும் 
நம் பெயரில் நாமும் வாழ 
என்ன தவம் செய்தனை யசோதா?

Comments

Popular posts from this blog

ஓட்டம்

வலிமாலை...

உனக்காயொரு காலை.