தோசை...வெளியிடை...கண்ணம்மா!

காற்றில்லா இடத்திலும் என் தோசையைச்சுட்டது நானே.
பிரபஞ்சப்பசிக்கு பால்வெளிகள்.
நாம் பிறந்த பசிக்கு பிரேக் ஃபாஸ்ட்டும், லன்சும் டின்னரும்.
என்னைச்சுற்றும் பால் வெளி.
பால் வெளி போல என்தோசை.
சுற்றிச்சுழலுது பூமி அதை சுட்டிக்காட்டுது தோசை.
எண்ணங்களால் வாழ்க்கை, எண்ணியே இருந்தால் வழுக்கை.
சூன்யத்தினின்று சுழல்.
சுட்ட மாவாய் தோசை.
காற்று வெளியிடை தோசை😂.
கண்ணம்மா!
மாவு வெளியிடை காற்று.
பால்வெளியிடையே பூமி !
நானொருவள் சுழற்றும் கரண்டியாலே நான் படைப்பாளி !
தானே தான் சுற்றும் பால்வெளியாலே நாம் உயிராளி !
ராஜாளிப்பறவையென்றன் தோசை.
காலையோசை விடியும் என் தோசை சுடுமோசை கேட்டு.
எனக்குள் ஓடும் சுழலாய் கரவட்டம், கரகாட்டம் & தோசை வட்டம்.
சுருட்டிப்போட்டு தின்று நின்றால் மனவோட்டம்,
ஓடி வந்து சீட் பிடித்து நின்றாலும்...
மனசுக்குள் சுழலும் தோசை வட்டங்கள்,
ஆசை வட்டங்கள்.
பிரபஞ்சயோடையில் நீந்துகின்ற பால்வெளிக்குள் என் சூரியக்குடும்பம். தூசிலும் தூசென்றால் ,
தோசை வெளியிடை கண்ணம்மா உன் காதலும் அதனினும் மெலிசா...
மெலிசா...?
A Gladys Stephen cookery 😂!

Comments

Popular posts from this blog

ஓட்டம்

வலிமாலை...

உனக்காயொரு காலை.