தீக்குள் பூத்த மல்லிகை..

தீக்குள் பூத்த மல்லிகை நீ.
ஒரு காகிதப்பூவாய் வளர்ந்திருந்தால் என்றோ பெய்த மழையில் உருக்குலைந்திருப்பாய்.
காட்டுச்செடி, நாடோடிக்காற்று. பேய்க்காற்றில் பிரசவித்த கவிதை உன் மௌனம்.
காயசண்டிகைகளைப்பார்த்திராத கண்ணீர் சண்டிகை. 
பெருமூச்சுகளின் மொழிபெயர்ப்புக்கென்று நீ வாங்கியதெல்லாம் அகராதிகளையன்று.
ஆழ் மனசை!
ஒரு விபத்தால் தொலைந்து போயிருக்க வேண்டிய நீ வித்தாய் எழுந்ததெல்லாம் வித்தையன்று.
வலிக்குதிரைகள் மேலேறி நீ நடத்திய அசுவமேத யாகங்களை முறியடிக்க நினைத்த அரசநினைப்பெல்லாம் வென்று மென்ற அமாமிசம் நீ !
ஆலகாலங்களை விழுங்கி ஆலாய் எழுந்த உன் உறுதியில் எழுவதன்றோ பெண்ணதிகாரம்.
வாழ்க ராசாத்தி, பெண்பிள்ளாய்!
நானே. எனக்குள் நீயே.

Comments

Popular posts from this blog

ஓட்டம்

வலிமாலை...

உனக்காயொரு காலை.